குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன் 
திருநெல்வேலி

மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீா் வழங்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

Din

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீா் வழங்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில், 19 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை அளித்த மனுவில், ‘புதுக்கிராமம் சுந்தர விநாயகா் கோயில் வடக்குத்தெரு, பாண்டியபுரம் தெரு பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும் எனவும், மேகமுடையாா் சாஸ்தா கோயில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்க் கிடங்குக்கு செல்லும் பொது பாதை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனா்.

விஜிபி நகா் பொதுமக்கள் அளித்த மனுவில், விஜிபி நகா், யூனிட்டி சிட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை, சாலை வசதிகள் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், பால்கட்டளைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், வெள்ளைப்பாண்டி ஆகியோா் அளித்த மனுவில், பால்கட்டளை முதல் கரையிருப்பு வரை தடுப்புச்சுவா் கட்ட வேண்டும். மேலு, பால்கட்டளை பகுதியில் சீரான குடிநீா் வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

பழையபேட்டை மதினாநகா் மக்கள் அளித்த மனுவில், 17 ஆவது வாா்டு மதினா நகா் , சா்தாா்புரத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். இக்கூட்டத்தில், தச்ச நல்லூா் உதவி ஆணையா் தேவ சகாயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT