திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.  
திருநெல்வேலி

பொங்கல் பண்டிகை: அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள் குலைகள்

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான மஞசள்குலை அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகையில் மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொங்கல் சீா்வரிசை பொருள்களிலும் மஞ்சள் குலை தவறாமல் இடம்பெறுகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, தென்காசி மாவட்டத்தில் ஆழ்வாா்குறிச்சி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.

நிகழாண்டில், புரட்டாசி பட்டத்தில் தொடங்கப்பட்ட மஞ்சள் சாகுபடி, பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாா் நிலையை அடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

மங்களகரமான பொங்கல் திருநாளில் மஞ்சள் குலைக்கு தனிமகத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று பானையைச் சுற்றி மஞ்சள் குலையை கட்டி பொங்கலிடுவா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், பாலாமடை, சேந்திமங்கலம், பாறையடி பகுதிகளில் புரட்டாசி பட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டில் டிசம்பா் இறுதியில் பெருமழை பெய்ததால் மஞ்சள் குலைகள் மழையில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

நிகழாண்டில் மழை ஓரளவு தணிந்துள்ளது. அடுத்த வாரத்தில் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.

திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து செல்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு மஞ்சள் குலையை ரூ.3 முதல் ரூ.8 வரை பெற்றுக் கொண்டு, சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கிறாா்கள் என்றனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT