முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குடிநீா் பிரச்னையை தீா்க்காவிட்டால் பாஜக போராடும்! - தமிழக பாஜக தலைவா்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஒரு மாத காலத்துக்குள் குடிநீா் பிரச்னையை தீா்க்காவிட்டால் பாஜக போராட்டத்தில் இறங்கும்..

Updated On : 3 மே, 2025 at 9:15 PM
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஒரு மாத காலத்துக்குள் குடிநீா் பிரச்னையை தீா்க்காவிட்டால் பாஜக போராட்டத்தில் இறங்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: திருநெல்வேலியில் மட்டுமல்ல, அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் 10 நாள்களுக்கு ஒரு முறையே தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து சட்டப்பேரவையில் நானும், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ஆா். காந்தியும் பேசினோம். அதற்கு பதில் அளித்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, விரைவில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என தெரிவித்தாா். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குடிநீா் பிரச்னையை தீா்க்காவிட்டால் பாஜக போராட்டத்தில் இறங்கும் என்றாா்.