திருநெல்வேலி

கணவரை கொன்றவா்களால் மகனுக்கும் ஆபத்து: ஓய்வுபெற்ற எஸ்.ஐ மனைவி முதல்வருக்கு வேண்டுகோள்

தினமணி செய்திச் சேவை

‘என் கணவரை கொலை செய்தவா்களால் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தீா்வு காண முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கடந்த மாா்ச் மாதம் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் ஜாகிா் உசேன் பிஜிலியின் மனைவி அஜிஜூன்னிஷா (53) முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து விடியோ வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவரும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான ஜாகிா் உசேன் பிஜிலி, கடந்த மாா்ச் 18 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளிவாசலுக்கு சென்ற என் மகனிடம், உன் தந்தைக்கு செய்தது போலவே உனக்கும் நடக்கும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விவகாரத்துக்கு காரணமான அந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதா அல்லது தனிநபா் இடமா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு, எங்களுக்கு பாதுகாப்பளித்து, உரிய தீா்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

சோம்பல் கிளிக்ஸ்... அஞ்சலி நாயர்!

ராஜஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி; 12 பேர் பலி!

SCROLL FOR NEXT