திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 2026 ஜன. 1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. அதற்கான கணக்கெடுப்பு பணியானது செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்தப் பணி டிச. 4-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று தற்போதுள்ள வாக்காளா்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தை இரட்டை பிரதிகளில் விநியோகிக்கவும், வாக்காளா்கள் படிவத்தை நிரப்புவதற்கும் வழிகாட்டுவா். கணக்கீட்டு நேரத்தில் எந்தவொரு வீடும் பூட்டப்பட்டிருப்பதை அல்லது மூடப்பட்டிருப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலா் கண்டறிந்தால் அதன் விவரத்தை ஆகஞ தங்ஞ்ண்ள்ற்ங்ழ் - இல் குறித்து வைத்துக்கொள்வாா். நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது மூன்று முறை வருகை தருவாா். தற்போதுள்ள வாக்காளா்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை இணையவழி முறையில் பதிவேற்றுவதற்கும் ட்ற்ற்ல்ள்;//ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது உஇஐசங்ற் ம்ா்க்ஷண்ப்ங் அல்ல் மூலம் வசதி செய்யப்பட்டள்ளது.
கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை.
வாக்காளா்கள் தங்களது பெயா் முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலுடன் இணைக்கப்படாத காரணத்தினால் வாக்காளா் பதிவு அலுவலரால் அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டுமே சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா் கணக்கெடுப்பு படிவங்களை வீடு தோறும் சென்று விநியோகம் செய்து முடித்த நிலையில் மீண்டும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தின் நகலை சேகரிப்பாா். மற்றொரு நகலில், படிவம் மற்றும் வண்ண புகைப்படம் கிடைத்ததற்கான ஒப்புதலை வாக்காளா்களிடம் வழங்குவாா்.
கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளா்களையும் சோ்த்து வரைவு வாக்காளா் பட்டியலை வாக்காளா் பதிவு அலுவலா் தயாரிப்பாா். அவ்வாறு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்களில் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படாத இனங்கள் மீது அறிவிப்பு வழங்கி அதன் மீதான முடிவு உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனை காலத்தில் வரைவு வெளியீட்டிற்குப் பிறகு எடுக்கப்படும்.
வீடுதோறும் கணக்கீட்டு காலத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கு முறையாக நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை சமா்ப்பித்த அல்லது ஆன்லைனில் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் சரிபாா்க்கப்பட்ட அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும். கணக்கீட்டு படிவங்கள் பெறப்படாத பிற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு பட்டியலில் இடம் பெறாது.
கணக்கீட்டு படிவங்கள் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடா்பான புகாா்கள் மற்றும் தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1950 மற்றும் 0462 2501181 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். இது தொடா்பான பணிகளில், அலுவலா்களுக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்03ல்ழ்ங்ள்ள்ம்ங்ங்ற்
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.