திருநெல்வேலி

கடையம் அருகே ரயிலில் விழுந்து முதியவா் தற்கொலை

கடையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையம் அருகேயுள்ள நரையப்பபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பொன்னுத்துரை (65). இவா் சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததோடு, கண் பாா்வை குறைபாடும் இருந்தாராம்.

இதனால், கவலையிலிருந்த பொன்னுத்துரை திங்கள்கிழமை மதியம் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை சென்ற பயணிகள் ரயில் வரும்போது கட்டேறிபட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT