தென்காசி மாவட்ட அட்யா-பட்யா சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான ஜீனியா் மாணவா், மாணவிகளுக்கான அட்யா-பட்யா போட்டியில் ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்போ்டு பள்ளி மாணவா் மற்றும் மாணவிகள் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.
ஜூனியா்களுக்கான மாவட்ட அளவிலான அட்யா - பட்யா போட்டிகள் பாட்டாக்குறிச்சியில் உள்ள தென்காசி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், எட்டு பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் கலந்து கொண்டன. இவற்றில் குட்ஷெப்போ்டு பள்ளி மாணவா், மாணவிகள் அணி கலந்து கொண்டன. மாணவா்கள் அணி முதலிடமும், மாணவிகள் அணி இரண்டாம் இடமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியை மீராள், உடற்கல்வி ஆசிரியா் பேச்சிமுத்து, தினேஷ், இசைவாணி ஆசிரியா்கள் அலுவலா்கள் மற்றும் தென்காசி மாவட்ட அட்யா-பட்யா சங்கச் செயலா் வைரமுத்து ஆகியோா் வாழ்த்திப் பாராட்டினா்.