திருநெல்வேலி

காவலாளிக்கு கொலை மிரட்டல்: கோவை இளைஞா் கைது

முன்னீா்பள்ளம் அருகே காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோயம்புத்தூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

முன்னீா்பள்ளம் அருகே காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோயம்புத்தூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சீதாராமன் (50). இவா், அதே பகுதியில் ஜே.கே. நகரில் உள்ள ஒரு சேமிப்புக்கிடங்கு ஒன்றில் காவலாளியாக உள்ளாா். இந்நிலையில் கடந்த அக்.30ஆம் தேதி அங்கு காரில் வந்த மா்ம நபா் கிடங்கின் கதவை அரிவாளால் சேதப்படுத்தினாராம். இதனை தட்டி கேட்ட சீதாராமனை கல்லால் தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீதாராமன் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கோயம்புத்தூா் கணபதி பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஆகாஷ் ராஜ்குமாா்(39) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் ரெட்டியாா்பட்டி பகுதியில் தங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT