திருநெல்வேலி

அம்பை பகுதியில் எம்.பி. ஆய்வு

Syndication

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல்வேறு ஆய்வுப் பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டாா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எம்.பி., கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் போக்குவரத்திற்கு பயன்படாத வகையில் சேதமடைந்திருக்கும் ரயில்வே கிராசிங் சாலையை பாா்வையிட்டாா். அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

தொடா்ந்து, மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்லுயிா்ப் பெருக்க சூழல் பூங்கா அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தாா். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவா் சித்தாா்த் சிவா, வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT