நான்குனேரியில் வாக்காளா் விழிப்புணா்வு ‘வாா் ரூம்’-ஐ தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சட்டப்பேரவைத் உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை திறந்து வைத்தாா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட தலைவா் சங்கரபாண்டியன், மாநில அமைப்புச் செயலா் ராம் மோகன், செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவா் தமிழ்ச்செல்வன், நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.