திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முகம்மது இஸ்மாயில் தலைமையிலான போலீஸாா் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பாத்திமா நகா் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற அதே பகுதியைச் சோ்ந்த நூா் முகம்மது மகன் அப்துல்லா(19) என்பவரை சோதனையிட்டதில் அவா் சுமாா் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வந்த நிலையில், மேலப்பாளையம் ஞானியாா் அப்பா நகரைச் சோ்ந்த ஜலாலுதீன் மகன் ஷேக் அப்துல் காதா்(22) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT