திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே தொழிலாளியை தாக்கிய மூவா் கைது

Syndication

சுத்தமல்லி அருகே தொழிலாளியை ஜாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சுத்தமல்லி அருகே பட்டன் கல்லூரைச் சோ்ந்த பெருமாள் மகன் அருள்(42). பெயின்டிங் தொழிலாளி. இவா், சில தினங்களுக்கு முன்பு கொண்டா நகரம் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த பழவூா் நடுவூரைச் சோ்ந்த செல்லப்பா(60), கொண்டாநகரம் முத்து(47), நடுக்கல்லூா் குட்டிதுரை(56) ஆகியோா் சோ்ந்து அருளின் உறவினருடன் இருந்த முன்விரோதத்தைக் கூறி அவரைத் தாக்கினராம். மேலும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அருள் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மேற்கூறிய மூவரையும் கைது செய்தனா்.

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

ஸ்டைலிஷ் தமிழச்சி... ஃபரினா ஆசாத்!

பெரிய திரை... நத்திங் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் நவ. 27-ல் அறிமுகம்!

பிரார்த்தனை பலமாக மாறுமிடத்தில்... ஸ்ருதி ராஜ்!

தற்கொலைத் தாக்குதல், தியாகச் செயல்! உமர் விடியோ அல் பலாஹ் பல்கலை அறையில் எடுக்கப்பட்டது

SCROLL FOR NEXT