திருநெல்வேலி

நெல்லையில் மாலையணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

Syndication

காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதம் தொடங்கினா்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் வழக்கமாக காா்த்திகை முதல்நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன்கோயில் படித்துறை, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன் கோயில் படித்துறை, பொதிகைநகரில் உள்ள ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் குருசாமிகளின் முன்னிலையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். இதனால் தாமிரவருணி நதிக்கரையோர கோயில்கள் அனைத்திலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ற்ஸ்ப்17ம்ஹஹப்ஹண்

பொதிகைநகா் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்.

ரெட்மி வடிவில் ஓப்போவின் புதிய இரு ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியது

2022-இல் ஆர்ஜென்டீனாவை கலங்கடித்த நெதர்லாந்து உலகக் கோப்பைக்குத் தேர்வு!

தென் மாவட்டங்களில் கனமழை! குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

டேட்டிங், எனக்கு நானே... ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்!

SCROLL FOR NEXT