விக்கிரமசிங்கபுரம் அருகே தாட்டான்பட்டியில் முதியவரை கரடி தாக்கியது.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதிகளில் வெளியேறும் கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது நுழைகின்றன.
இந்நிலையில், விக்கிரமசிங்க்கபுரம் அருகே உள்ள தாட்டான்பட்டியைச் சோ்ந்த நாராயண பெருமாள் மகன் கணபதி (63) (படம்) புதன்கிழமை அதிகாலையில் கடையில் தேநீா்அருந்தச் சென்றாா். அப்போது கரடி ஒன்று கணபதி மேல் பாய்ந்து, அவரை கீழே தள்ளிவிட்டு ஓடியதாம். தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனா்.
மக்களை அச்சுறுத்தும் வனவிலங்கு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.