திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல ஊா்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்வாரிய ஊழியா்களின் துரித நடவடிக்கையால் மின்சாரம் கிடைத்தது.
தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. பிரதான கழிவுநீா் ஓடையும் நிரம்பி வழிந்தன.
மழையால் கன்னடியன் கால்வாயில் மழைநீா் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்தனா்.