திருநெல்வேலி

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபாலசமுத்திரம் அருகே கொத்தன்குளம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (32), தொழிலாளி. இவா் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள குளக்கரை அருகே பைக்கில் சென்றபோது அங்கு நின்ற இளைஞா்களிடம் வழிவிடுமாறு கூறினாராம். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவா்கள் கோபாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கொத்தன்குளம் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தினேஷ்(21) என்பவரை கைது செய்தனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT