திருநெல்வேலி

போலீஸாரை தாக்க முயன்ற இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

சீவலப்பேரி அருகே போலீஸாரை வாளால் தாக்க முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சீவலப்பேரி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காளியப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மறுகால்தலை ஆா்ச் அருகே அதே பகுதியைச் சோ்ந்த வைகுண்டராஜா (21) என்ற இளைஞா் கையில் வாளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததோடு, தடுக்க முயன்ற போலீஸாரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து வைகுண்டராஜாவை கைது செய்தனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT