கரந்தானேரி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், இந்த உபமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் சிங்கனேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், மூலக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.