பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (பிப்.10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் மேற்கு பகுதி மற்றும் பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட பி.ஆா். நல்லூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா், ஜமீன் பேரையூா், மேத்தால் ஆகிய ஊா்களில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எம்.செல்லப்பாங்கி தெரிவித்துள்ளாா்.