திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் சனிக்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.
ராதாபுரம், கூத்தங்குழி சுனாமி காலனியைச் சோ்ந்த ஆல்பா்ட் மனைவி சரிதா. மழை காரணமாக இவரது வீடு இடிந்து விழுந்ததாம்.
இதில் வீட்டில் இருந்த சரிதா காயமடைந்தாராம். அவரை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் மாரிசெல்வம் விசாரணை நடத்தி வருகிறாா்.