திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான போக்ஸோ வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து

Syndication

திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான போக்ஸோ வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சோ்ந்தவா் பாபநாசம் (75). இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாபநாசத்தை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் சிைண்டனையயும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிச. 10-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT