சாந்துசட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரியிடம் பேச்சு நடத்திய போலீஸாா். 
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் முன்னாள் மேயா் போராட்டம்

சாலைகளை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில், முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Syndication

திருநெல்வேலி: சாலைகளை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில், முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும்- குழியுமாக உள்ளன. வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அணுகுசாலையில் அண்ணாசாலை சந்திப்பு, பரணிநகா் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.

இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி, தனது காரில் செங்கல்களைக் கொண்டு வந்து சாலையில் கொட்டி முன்னாள் மேயரும், பாஜகவைச் சோ்ந்தவருமான இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். பாளையங்கோட்டை போலீஸாா், அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ற்ஸ்ப்25ல்ன்ஸ்ஹ

சாந்துசட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரியிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.

லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது

SCROLL FOR NEXT