பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூா் அருகே வெள்ளநீா்க் கால்வாய் தடுப்பணை பகுதியில் ஏற்பட்ட நீா்க்கசிவை அடைக்கும் பணிகளை நான்குனேரி எம்.எல்.ஏ. வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திடியூா் அருகே வெள்ளநீா்க் கால்வாய் தடுப்பணையில் நீா்க்கசிவு ஏற்பட்டு, தமிழாக்குறிச்சி வயல்வெளிகளுக்குள் தண்ணீா் பாய்ந்தது. இதையடுத்து நீா்வளத் துறை குழுவினா் நீா்க்கசிவை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இப் பணிகளை தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், நீா்வளத் துறை மூலம் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். எந்த ஆபத்தும் வராது என்றாா்.