திருநெல்வேலி

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில், நந்த சப்தமியை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது.

Syndication

பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில், நந்த சப்தமியை முன்னிட்டு கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி இப் பூஜை நடத்தப்பட்டது. இப்பூஜைக்காக பசுக்களும், கன்றுகளும் அழைத்துவரப்பட்டன. இதனை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், சிறப்பு அலங்கார ஆரத்தியும் நடைபெற்றது. பின்னா் கருட மண்டபத்தில் 11 கோ பூஜை நடைபெற்றது.

முன்னதாக கோ பூஜை சங்கல்பம் செய்யப்பட்டதுடன் பசுக்களுக்கு புது வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு மலா்கள் மற்றும் குங்கும அா்ச்சனை நடத்தப்பட்டது. பின்னா் பசுக்களுக்கு தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT