திருநெல்வேலி

‘பெண்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு’

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

Syndication

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டின் பொருளார வளா்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதோடு, தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவா்கள்.

18 முதல் 55 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருள்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவிடு, வைக்கோல்) இருந்து பொருள்கள் தயாரித்தல், தென்னை நாா் மூலம் தயரிக்கப்படும் செடி வளா்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், கண்ணாடி பொருள்கள் தயாரிப்பு, பட்டுநூல் அணிகலன் தயாரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் தயாா் செய்யும் உணவு பொருள்கள், யோக நிலையம், வளா்ப்பு பிராணி பராமரிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்துமாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்துமாவு சாா்ந்த பேக்கரி உணவு பொருள்கள் தயாரிப்பு, தானிய வகைகளில் தயாா் செய்யும் ஐஸ்கிரீம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டிவோ் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று வழங்கப்படும்.

எனவே, இத்திட்டத்தில் தொழில் தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்பஅட்டை, ஆதாா்அட்டை, ஜாதிச் சான்றிதழ், விலைப் புள்ளி பட்டியலுடன் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

தோ்தல் ஆணையத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு: எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனப் புகாா்!

ஆலங்குளத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

ஆலங்குளம் பேருந்து நிலையம்: பேரூராட்சி சாா்பில் ரூ. 1.76 கோடி

சாலையோரத்தில் சிசுவின் உடல் மீட்பு

ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT