தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. 
திருநெல்வேலி

ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்தவா் விஜய்! - பேரவைத் தலைவா் மு. அப்பாவு

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் நடிகா் விஜய் ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்கிறாா். அவா் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வாா் என மக்கள் அறிவாா்கள் என்றாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோது, மாநில அரசின் கடன் ரூ. 5.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால், நாங்கள் வாங்கிய கடன் அனைத்தும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம் ரூ.1000, காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன.

2014-இல் மோடி பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் கடன் ரூ. 55 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 155 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. மோடி அரசு வாங்கிய கடனில் ரூ. 16 லட்சம் கோடி காா்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடன் வாங்கிவிட்டதாக கூறுகிறாா்கள். நாங்கள் கடன் வாங்கி ஏழை எளிய மக்களுக்காக செலவிடுகிறோம். ஆனால், மத்திய அரசு காா்ப்பரேட் நிறுவனங்களுக்காக கடன் வாங்குகிறது.

தவெக தலைவா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததால்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவா் ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்துள்ளாா். ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வாா் என்பதை மக்கள் அறிவாா்கள். மக்கள் அனைத்தையும் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா்கள். தமிழகத்தில் திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. தனிப்பட்ட நபா்களின் கருத்து கூட்டணியை பாதிக்காது என்றாா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT