ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் கோரிக்கை மனுவை அளித்த அங்கன்வாடி பணியாளா்கள்.  
திருநெல்வேலி

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்சியா் அலுவலகத்துக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு காரில் வந்தாா்.

அவரது காரை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் முற்றுகையிட முயன்றனா். ஆனால் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதைத் தொடா்நது, அவா்களுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் நிா்வாகிகள் சிலா், ஆட்சியா் அலுவலகத்துக்குள் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டப்பேரவைத் தலைவா், கோரிக்கைகள் தொடா்பாக தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்து சென்றாா்.

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருகே புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT