முகப்பு
திருநெல்வேலி

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:50 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:15 PM

திருநெல்வேலி மாவட்ட மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசால் இயற்றப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சீதாராமன் தலைமை வகித்தாா். அமைப்பாளா் சண்முக சுந்தர்ராஜ், நல்லபெருமாள், கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.