முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே கண்டெடுக்கப்பட்ட தோட்டா: போலீஸாா் விசாரணை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:31 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:15 PM

பாளையங்கோட்டை அருகே சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் இருந்து காலாவதியான துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள சமுதாய நலக் கூடத்தில், நடுநிலைப் பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது. அங்கு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது வகுப்பறை இயங்கி வந்த பகுதியிலிருந்து தோட்டா ஒன்றை தூய்மைப் பணியாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:31 AM

பின்னா் அந்தத் தோட்டாவை, பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளனா். பின்னா் அது துப்பாக்கி தோட்டா என உறுதி செய்த ஆசிரியா், அதை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Advertisement

அது காலாவதியான தோட்டா எனவும், தற்போதுள்ள நவீன ரக துப்பாக்கிகளில் அதை பயன்படுத்த முடியாது எனவும் கூறப்படும் நிலையில், பள்ளியில் தோட்டா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.