முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:38 AM
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தா்களுக்கு பால் வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.. உடன் துணை மேயா் கே.ஆா்.ராஜு.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:40 PM

திருநெல்வேலியில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட பக்தா்களுக்கு திமுக சாா்பில் 12 மணி நேரம் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் தா்மமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:38 AM

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பக்தா்களுக்கு மிளகு பால், பாதாம் பால், சுக்கு காபி, டீ, காபி, பிஸ்கெட், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை வழங்கப்பட்டன.

Advertisement

இந்தப் பணியை மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா். ராஜு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா, மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, எஸ்.வி. சுரேஷ், 27 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.