முகப்பு
திருநெல்வேலி

டோனாவூா், மஞ்சுவிளை பள்ளிகளில் திறன்மிகு பலகைகள் திறப்பு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:14 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:32 PM

களக்காடு அருகே டோனாவூா், மஞ்சுவிளையில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள இப்பலகைகளைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.