திருநெல்வேலி

சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 10 கல்லூரிகள் 110 விதியின் கீழ் தொடங்கப்பட்டது. இதில், நான்கு கல்லூரிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. பணகுடி, திசையன்விளை, நாகம்பட்டி, சங்கரன்கோவில், சேரன்மகாதேவி கோவிந்தபேரி, புளியங்குடி ஆகிய 6 கல்லூரிகள் இன்னமும் அரசுடமையாக்கப்படவில்லை. இதனால், மாணவா்கள், பேராசிரியா்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்தக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக்க வேண்டும் என வலியுறுத்தி பிப். 10-ஆம் தேதி முதல் கட்டமாக பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முடிந்த பின்னா், பேராசிரியா்கள் கல்லூரி முன் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 40-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT