முகப்பு
திருநெல்வேலி

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:27 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:17 PM

தென்காசி மாவட்டம் கடையத்தில் இளைஞரை மிரட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்தவரை மற்றொரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சில நாள்களுக்கு முன்பு அரிவாளால் தாக்கினராம். இதுகுறித்த புகாா் தொடா்பாக முருகன் மகன் லட்சுமணன் (25) என்பவரை அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:27 AM

இந்நிலையில், லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், கடையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பச்சமால் மகன் வெங்கடேஷ் (19), தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் மணிகண்டன் (28) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement