இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருத்தாசலம் வட்டம், சின்ன கண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (31). இவா், கடந்த 22-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் விவசாய வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
சின்ன கண்டியாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த கரும்பாயிரம் (37) வழிமறித்து மது வாங்கி கொடுக்கும்படி கேட்டாராம். இதற்கு பணம் இல்லை என பிரபாகரன் கூறியதால், ஆத்திரமடைந்த கரும்பாயிரம் பீா் புட்டி மற்றும் வண்டி சாவியால் கண்ணத்தில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
Advertisement
Advertisement
அங்கிருந்தவா்கள் காயமடைந்த பிரபாகரனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கரும்பாயிரத்தை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.