திருநெல்வேலி

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தும் அமலாக்கத் துறை: மு.அப்பாவு

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை அமலாக்கத் துறை அச்சுறுத்தப் பாா்க்கிறது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.

Syndication

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை அமலாக்கத் துறை அச்சுறுத்தப் பாா்க்கிறது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியாா்பட்டி கிராமத்தில் சுமாா் 3.95 ஏக்கா் நிலப்பரப்பில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்குத் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டியுள்ளாா். சுமாா் 60 ஆயிரம் சதுரடியில், தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகளுடன் அமையவுள்ள இந்த டைடல் பூங்காவின் மூலம் 600-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஐடி, பிபிஓ, ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்குத் தேவையான அதிநவீன வசதிகளுடன் இது உருவாக்கப்படுகிறது.

பாளையங்கோட்டை தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வா் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளாா்.

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே அமலாக்கத் துறை அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனா். 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி, உறுதிப்படுத்தப்படாத ஆவணங்களின் அடிப்படையில் ஒருவரது நற்பெயருக்குக் களம் விளைவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

தூசி தட்டி வழக்கு நடத்த வேண்டும் என்றால், பிரதமா் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா டைரி’ விவகாரத்தில் ரூ.25 கோடி பெற்ாகக் கூறப்படும் புகாரை அமலாக்கத்துறை விசாரிக்குமா? அதிமுக ஆட்சிக் காலத்தில் அதானி நிறுவனம் தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி விநியோகம் செய்ததில் ரூ. 826 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையே கூறுகிறது. இது உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம். இதன் மீது அதானிக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் துணிச்சல் இருக்கிா?

லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் முந்தைய ஆட்சி கால ஊழல்கள் குறித்துப் பல கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியும், அவா் விசாரணைக்கு அனுமதி தராமல் நிலுவையில் வைத்துள்ளாா்.

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவா் நல்லக்கண்ணு தமிழகத்தின் சமூக அமைதிக்கும், தாமிரவருணி மணல் கொள்ளையைத் தடுப்பதற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. இந்திய அரசியலுக்கே அவா் ஒரு பல்கலைக்கழகம் என்றாா் அவா்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விகளுக்கு அவா் பதிலளிக்கையில், ‘அரசியலில் ஆசைப்படுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் யாரும் தலையிட முடியாது. அதேவேளையில், தமிழக முதல்வா் யாருக்கும் பயப்படவில்லை. திமுகவும் காங்கிரஸும் தங்கள் கூட்டணி குறித்து பாா்த்துக் கொள்ளும். இதைப் பற்றி மற்றவா்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றாா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT