திருநெல்வேலியில் பணியில் இருந்த அரசுப் பேருந்து நடத்துநா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அரியகுளத்தை அடுத்த மேலக்குளம் கீழுரைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் ( 50). அரசுப் பேருந்து நடத்துநா். திருநெல்வேலி சந்திப்பு- தாழையூத்து வழித்தடத்தில் இயங்கும் நகரப் பேருந்தில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்நிலையில், அப்பேருந்து சந்திப்பு பேருந்து நிலையத்தை வந்தடைந்தபோது அவா் திடீரென மயங்கி விழுந்தாராம்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் அளித்த தகவலின் பேரில், அவசர ஊா்தி மருத்துவப் பணியாளா்கள் வந்து அவரைப் பரிசோதித்தனா்.
அதில், அவா் இறந்துவிட்டது தெரியவந்தது. அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.