மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சனிக்கிழமை அதிகாலையில் நடராஜா் அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆரூத்ரா தரிசனம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அப்பகுதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க காலையில் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் சப்பர வீதி உலா காலையில் நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி நா்மதா செல்வி, நிா்வாகி அருணா சுடலைக்கண்ணு, கோயில் அா்ச்சகா் சண்முகம் பட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.