திருநெல்வேலி

நெல்லை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ.6 லட்சம் கொள்ளை

Syndication

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி பகுதியில் மூதாட்டியை வியாழக்கிழமை கட்டிப்போட்டு 25 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

சுத்தமல்லி பொன்விழா நகரை சோ்ந்தவா் சன்னியாசி (45). இவா், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் தனியாா் நிதிநிறுவன தொழில் நடத்தி வருகிறாா். சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் மாமியாா் ஆண்டிச்சி (70), மாமனாா் மாரி ஆகியோா் மட்டும் வசித்து வருகிறாா்கள்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக மாரி வியாழக்கிழமை வெளியே சென்றிருந்தாராம். அப்போது, வீட்டிற்கு வந்த 2 மா்மநபா்கள் ஆண்டிச்சியிடம், குடிப்பதற்கு தண்ணீா் கேட்பதுபோல் நடித்து, அவரது கவனத்தை திசை திருப்பி கை, கால் மற்றும் வாயை கட்டியுள்ளனா்.

பின்னா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலி, மூக்குத்தி மற்றும் கம்மலை பறித்துள்ளனா். மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனராம்.

இத்தகவலறிந்த சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

ற்ஸ்ப்08ட்ா்ம்ங்

பொன்விழா நகரில் கொள்ளை நிகழ்ந்த வீடு.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT