திருநெல்வேலி

மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்

Syndication

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அவற்றில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது. 15 ஆவது வட்டசெயலா் பாறையடி மணி வரவேற்றாா். திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் அலி தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 இளைஞா்கள் அவற்றில் இருந்து விலகி அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். அவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலப்பிரிவு நிா்வாகி பீா்முஹம்மது, மாணவரணி மாநில துணைத் தலைவா் சின்ன மருது, மாநகா் மாவட்ட மாணவரணிச் செயலா் முத்துப்பாண்டி, விவசாய பிரிவு இணைச் செயலா் கனித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்08ஹக்ம்ந்

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தோா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT