திருநெல்வேலி

3 வீடுகளில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, பணம் திருட்டு

பொட்டல்புதூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 25 பவுன் நகை, வெள்ளி, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.

Syndication

பொட்டல்புதூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 25 பவுன் நகை, வெள்ளி, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.

பொட்டல்புதூா், சித்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து. ஆழ்வாா்குறிச்சியில் இனிப்பு கடை நடத்தி வருகிறாா். இவா் சில நாள்களுக்கு முன் தமது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூா் கோயிலுக்குச் சென்றாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, சுடலைமுத்துவின் வீட்டைப் பூட்டிவிட்டு அவரது மகன் முருகேசன் தனது வீட்டிற்கு சென்றாராம்.

சனிக்கிழமை காலை, சுடலை முத்து, குடும்பத்தினா் திரும்பிய நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா்.

இதேபோல் பா்மா காலனி பகுதியைச் சோ்ந்த நாலாயிரம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே சென்றுள்ளனா். ஆனால் அங்கு பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை. மேலும், பொட்டல்புதூா், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முஸ்தரி பேகம் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து ரூ. 26 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் குணசேகரன், காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT