திருநெல்வேலி

அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண் உள்பட 7 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்ட நிலையில்அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி, விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், கோட்டைவிளைபட்டியைச் சோ்ந்த மதன், வரகாபுரத்தைச் சோ்ந்த ராமலட்சுமி, பரமசிவன், புலவன்பட்டியைச் சோ்ந்த மரிய கிங்ஸ்டன், சிவந்திபுரத்தைச் சோ்ந்த தினகரன் ஆகிய ஏழு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 80 மது பாட்டில்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை காவல் ஆய்வாளா்ஆதம் அலி பறிமுதல் செய்தாா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT