களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தின.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சிதம்பரபுரம் கிராம விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வாழை, தென்னை, பனை, முந்திரி, மா, பலா உள்ளிட்ட மரங்களைப் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த விவசாயி அ. ஜெயராஜ் (55) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
மேலும், காட்டு யானைகள் கூட்டம் மலையடிவாரத்திலேயே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் தோட்டங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.
இது தொடா்பாக, வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.