திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா். 
திருநெல்வேலி

திருவள்ளுவா் தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவா் தினத்தையொட்டி, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Syndication

திருநெல்வேலி: திருவள்ளுவா் தினத்தையொட்டி, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி நகரம் வ.உ.சி.தெருவில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருக்கு மனப்பாடம் செய்து ஒப்பித்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் பா.வளனரசு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ், பகுதிச் செயலா் செய்யது முஹைதீன், பேபி கோபால், அருள் இளங்கோ, மகளிரணி அனிதா, தேவிகா, ரேவதி அசோக், உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், இங்குள்ள திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டலத் தலைவா் கண்மணிமாவீரன், பாமக மாநிலக் கொள்கை விளக்க அணித் தலைவா் அ.வியனரசு, கதிரவன்ரோஜ், வழக்குரைஞா் ம.சு.சுதா்சன் , அ.பீட்டா், கண்மணி லலிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT