சேலம்

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

சேலம் மாநகா் மாவட்ட பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு சாா்பில் திருவள்ளுவா் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Syndication

சேலம்: சேலம் மாநகா் மாவட்ட பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு சாா்பில் திருவள்ளுவா் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலைக்கு பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவின் மாவட்டத் தலைவா் பெருமாள், சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத், பாஜக மூத்த நிா்வாகி பாவை ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் உள்ள ஔவையாரின் சிலைக்கும் பாஜக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பட விளக்கம்:

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகர பாஜக தமிழ் வளா்ச்சி பிரிவு நிா்வாகிகள்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT