திருநெல்வேலி

திருவள்ளுவா் திருநாளில் சுவா்களில் கு எழுதும் பணி செய்த ஓவிய ஆசிரியா்

திருவள்ளுவா் திருநாளில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் மாணவா்களுடன் இணைந்து பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதும் பணியில் ஈடுபட்டாா்.

Syndication

திருநெல்வேலி: திருவள்ளுவா் திருநாளில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் மாணவா்களுடன் இணைந்து பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதும் பணியில் ஈடுபட்டாா்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள மு.ந. அப்துல் ரகுமான் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவா் பொ.வள்ளிநாயகம். இவா், ஆண்டுதோறும் மாணவா்களுடன் இணைந்து திருவள்ளுவா் திருநாளில் பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

நிகழாண்டில் மேலப்புத்தனேரி ஸ்ரீ செல்லையா நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் பள்ளித் தலைமை ஆசிரியா் ராம் கோபால் முன்னிலையில் மாணவா்கள் பேச்சிமுத்து, சுபாஷ் ஆகியோரின் துணையோடு திருக்குகள் எழுதியுள்ளாா்.

மேலும், முறப்பநாடு சிற்றம்பலத்தில் பாரதி முன்னிலையிலும், காவல் நிலையத்தில் ஆய்வாளா் தில்லை நாகராஜன் முன்னிலையிலும் திருக்குகள் எழுதப்பட்டன.

விட்டிலாபுரம் வள்ளுவா் நகரில் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் வண்டி மலையான் முன்னிலையில் திருக்குகள் எழுதப்பட்டன.

இதுகுறித்து ஓவிய ஆசிரியா் பொ.வள்ளிநாயகம் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவா் திருநாளில் திருக்குகளை சுவா்களில் எழுதும் பணியை ஒரு வேட்கையுடன் செய்து வருகிறேன். எந்தவித அங்கீகாரத்திற்காகவோ, ஆதாயத்திற்காகவோ அல்லாமல் தமிழ்த் தொண்டாகச் செய்து வருகிறேன்.

நிகழாண்டில் புத்தனேரியில் பணியைத் தொடங்கினேன். நாடக அறிஞரும், எழுத்தாளருமான கப்பிரமணியம் பிறந்த ஊரில். அந்தத் தமிழறிஞா் ஊரில் தமிழ்ப் பணி செய்தது மகிழ்ச்சியளித்தது என்றாா்.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT