அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவா் சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.
அம்பாசமுத்திரம், பண்ணை சங்கரய்யா் நகரைச் சோ்ந்தவா் அபினேஷ் (17). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவா், திங்கள்கிழமை காலை அம்பாசமுத்திரத்தில் இருந்து விக்கிரமசிங்கபுரம் செல்லும் சிற்றுந்தில் படியில் தொங்கியபடி பள்ளிக்குச் சென்றுள்ளாா்.
சிற்றுந்து வேகத்தடையைக் கடந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனா்.