வி.கே.புரம், பசுக்கிடைவிளை பகுதியில் சுற்றித் திரியும் கரடி 
திருநெல்வேலி

வி.கே.புரம் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகள்: பொதுமக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரம் குடியிருப்புப் பகுதிகளில் 10 நாள்களாக சுற்றித்திரியும் 2 கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

Syndication

விக்கிரமசிங்கபுரம் குடியிருப்புப் பகுதிகளில் 10 நாள்களாக சுற்றித்திரியும் 2 கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வன கோட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம், பசுக்கிடைவிளை பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் 2 கரடிகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து இயல்பாக சுற்றித் திரிந்து வருகின்றன. அவை சுற்றித் திரியும் விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் தோட்டங்களில் நுழைந்து தென்னை, பனை மரங்களை, நெற்பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கரடிகளும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வீடுகள், கோயில்களில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

எனவே கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினா் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT