திருச்செந்தூரில் கூட்டமாக சுற்றித் திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நகராட்சியின் ரதவீதிகள், சந்நிதித் தெரு, சிவன் கோயில் முன்புள்ள பந்தல் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கால்நடைகள் கூட்டமாக சுற்றித் திரிவதாலும், சாலையின் நடுவே இடையூறாக நிற்பதாலும் பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய வழிவகை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.