திருச்செந்தூரில் காவலா் ஓய்வு இல்லத்துக்கு அடிக்கல்
தூத்துக்குடிதிருச்செந்தூரில் காவலா் ஓய்வு இல்லத்துக்கு அடிக்கல்
திருச்செந்தூா் டி.பி. ரோட்டில் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் புதிதாக ரூ. 2 கோடி மதிப்பில் காவலா் ஓய்வு இல்லம் கட்டுவதற்கு டிஎஸ்பி மகேஷ்குமாா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில் கோயில் போலீஸ் காவல் ஆய்வாளா் கனகராஜன், காவலா் வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளா் சுமித்ரா, காவல் உதவி ஆய்வாளா்கள் காந்திமதி, வீரபாகு, முத்துசெல்வம், பாஸ்கா் உள்ளிட்ட போலீஸாா், தனிப்பிரிவு போலீஸாா் கலந்து கொண்டனா்.