திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்  (கோப்புப் படம்)
திருநெல்வேலி

கு போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் கு சாா்ந்த ஓவியம் வரைதல், கு ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் கு வார விழா திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கு சாா்ந்த ஓவியப் போட்டி, கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கு ஒப்புவித்தல் போட்டியில் தரவரிசை அடிப்படையில் முதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.3,000, மூன்றாம் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.2000 என மொத்தம் 15 பேருக்கு பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT